மாதிரி வினாத்தாள்
பாடம்: இல்லறத்தியல்
பாடம்: இல்லறத்தியல்
நேரம்: 3 மணி மொத்த மதிப்பெண் - 100
1. எல்லா வாக்குவாதங்களிலும் சரியான கட்சி _______________ உடையதே.(மனைவி)
2. தொலைக்காட்சிப் பெட்டியில் பார்க்கக் கூடாதவை ___________(விளையாட்டு நிகழ்ச்சிகள் )
3. இல்லற வாழ்க்கை இனிதே அமைய, தவறென்றால் ஒத்துக்கொள், சரி என்றால்? _________________________ (பொத்திக்கொள்)
4. ______________ வந்திட _______ பறந்து போம். (இல்லாள், இன்பம்)
5. சம்பளம் வரும் பின்னே, __________ வரும் முன்னே (ஷாப்பிங்)
II. ஒரு வரியில் விடையளி: (5 x 2 = 10)
1. வெற்றி பெற்ற எல்லா ஆணின் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள். எப்படி?
பதில்: ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டு
2. ஏன்?பதில்: நம்மை மீறி எப்படி?
3. அபாய நண்பர்கள் யார் யார்?பதில்: சந்தர்ப்பம் தெரியாத அரிச்சந்திரர்கள்
4. குடும்பத்தில் குண்டு வைப்பவர்கள் யார்?பதில்: திட்டம் தீட்டியே உண்மை பேசும் தீவிரவாதிகள்.
5. தனிமையிலும் உஷாராக இருக்கவேண்டிய இடங்கள் யாவை?பதில்: மனைவியின் நண்பர்கள் உலாவும் இடங்கள் அனைத்தும்.
III. சரியா தவறா கூறுக: 5 x 3 = 151. தாய்க்கும் பொண்டாட்டிக்கும் கருத்து வேற்றுமை ஏற்படும்போது உண்மையின்பக்கம் நிற்கவேண்டும். தவறு. உண்மையா? அப்படி என்றால் என்ன?
2. உலகத்திலேயே மிகக்கஷ்டமான கேள்வி - "இந்த ட்ரெஸ்லே நான் எப்படிஇருக்கேன்?" என்பதுதான். சரி. சாதா சரி இல்லை, 150% சரி.
3. நண்பர்களுடன் பார்ட்டி - மனைவியின் முழுச் சம்மதத்துடன் மட்டுமேசெல்லவேண்டும். தவறு.. அய்யோடா - உங்களுக்கு என்ன வயசு? குட்டீஸ் எல்லாம்மொக்க பாண்டியிடம் பாடம்
படிக்க வரக்கூடாது..
4. 10 பந்தில் 10 ரன் அடித்தார்களா என்பதைவிட, அபிக்கு ஆதியால் இன்று என்னதொந்தரவு வந்தது என்பதே முக்கியம். சரி. வேற வழி?
V விரிவான விடையளி - 5 x 10 = 50
5. பழமொழி விளக்குக: மனைவி சொல்லே மந்திரம்.
கோவிலில், பூஜைகளின் போது சொல்லப்படும் மந்திரங்கள் பெரும்பாலும் நமக்குப் புரிவதில்லை.யாரைத் திட்டுகிறார்கள் யாரை வாழ்த்துகிறார்கள் என்பனவெல்லாம், பின்னாள் விளைவுகள்அல்லது விளக்கங்கள் படித்தபின்னே ஓரளவு புரிந்ததுபோல தோற்றமளிக்கும். அதேபோல், மனைவிபேசும்போதும், முதலில் நமக்கு எதுவும் புரியாது. ஆனால், அந்தச் சொல்பேச்சு கேளாமல் விட்டால்முதலில் விளக்கங்களும், அதையும் மீறினால் விளைவுகளும் வரும். இந்த ஒற்றுமையினாலேயேமனைவி சொல்லே மந்திரம் என்று சொல்லப்படுகிறது.

Disclaimer
தகவல் தந்து உதவிய நம்ம பக்கத்து வூட்டூகாரன் " வட கிழக்கு மாநில தமிழன் க்கு ஒரு சலாம் போட்டுகறேன்
நண்றி வணக்கம்.

No comments:
Post a Comment