Sadistic post. நானே ஒப்புக்கொள்கிறேன்.
(இதை தேர்ந்த தமிழில் எழுதப்பட்ட நிலைத்தகவலாக பாவிக்கவும். ஏனென்றால் என்ன எழவைப்பற்றி பேசினாலும் பண்டரிபாய் தமிழில் தட்டச்சு செய்துவிட்டால் அதற்கு வீரியமான அந்தஸ்து கிடைத்துவிடுகிறது. In other words...kids these days)
---------
காலைல முழிக்கணும். வேலைக்கு போகணும். சாக்கடை/பீ அள்ளனும்.
அடுத்தநாள் முழிக்கணும். வேலைக்கு போகணும். சாக்கடை/பீ அள்ளனும்.
அதுக்கடுத்தநாள் முழிக்கணும். வேலைக்கு போகணும். சாக்கடை/பீ அள்ளனும்.
---------
ஒரேநாள்ல, 86.4 % புழக்கத்தில் இருக்கும் 500/1000 ரூவா நோட்டுகளை - எவன் எப்பிடி போனா என்னென்னு - மாத்தும் முடிவுக்கு வரும் அரசாங்கத்தால், வருஷக்கணக்கில் நடக்கும் இந்தமாதிரி வேலையை ஏன் தடை செய்ய முடியல ?
குலக்கல்வி மாதிரி குலவேலை அட்டகாசமாக நடைபெறும் ஒரே துறை இதுதான்
// Most of these workers are from the Mahar caste of Dalits. The job has 100% reservation: it has been passed from father to child for centuries //
இந்தியால இந்த மாதிரி வேலை பார்க்குறதால/பாத்தாதால...வருஷத்துக்கு 9000 - 12000 ஆட்கள் இறக்குறாங்க. ஆனா ஏன் இத யாரும் பெருசா பேசுறதில்ல ? இந்த ஒரு வாரமா லைன்ல நிக்குறதுக்கும் , கைல மை வைக்கிறாங்கன்னு பொங்குறோம் (நியாயம் தான். ஆனா அது பாய்ன்ட் இல்ல). ஆனா பல வருஷமா ஒரு human இன்னொரு humanன எப்பிடி நடத்தக்கூடாதோ அப்பிடி நடத்துறத ஒண்ணும் கண்டுக்கல (குறைந்தபட்சம் Train, platformல நிக்கும்போது கக்கூஸ யூஸ் பண்ணக்கூடாதுன்ற அறிவுகூட இல்ல). ஆனா நமக்கு - அதாவது மெஜாரிட்டியான மக்களை எப்ப/என்ன விஷயம் பாதிக்குதோ..அப்ப மட்டும் குரல் கொடுப்போம். இது human traits தான். பெரிய கண்டுபிடிப்பெல்லாம் ஒண்ணுமில்ல.
மெட்ராஸ்ல ஒவ்வொரு மழையின்போதும் ப்ளாட்ஃபாம்வாசிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகுறாங்க. ஆனா, மெஜாரிட்டியான ஆட்கள் பாதிப்படையும்போதுதான் "People are suffering you know" ஸ்டேடஸ் எல்லாம் வருது. "ATMல பணமெடுக்க உடல் ஊனமுற்றவர்கள் எல்லாம் வரிசையில் நின்று கஷ்டப்படுகிறார்கள்.." come on bro....இந்த நாட்ல டெய்லி அவுங்க கஷ்டபட்டுகிட்டு தான் இருக்காங்க. பொது கக்கூஸ் யூஸ் பண்ணும்னா கூட கைவெச்சு தவழ்ந்து தவழ்ந்து உள்ள போயாகணும் (இது வேற மாதிரி எடுத்துகிட்டு வரிஞ்சுகட்டிட்டு யாருனா வருவாங்க பாருங்க).நேத்து ஜெகா ஒரு லின்க் அனுப்பிருந்தார்,
https://youtu.be/1eEL9eS238I. இவுங்க தமிழ் தான் பேசுற மாதிரி தெரியுது...may be தப்பா கூட இருக்கலாம். இந்தக்கேள்விய இதுவர 447 பேர்கிட்ட கேட்டிருப்பேன் "தமிழ்/தமிழர்கள்/திராவிடம்னு சொல்றீங்க..ஆனா பன்னெடுங்காலமா ஒரு கூட்டத்தையே இப்பிடி பீ அள்ள விடுறீங்க..பல்லுயிர் ஓம்புதல்ன்னு சொல்றீங்க...காளைமாடுகள் எங்கள் பிள்ளைகள், இயற்கையோட இயைந்த வாழ்வு..ன்னு சொல்றீங்க...கூட இருக்குற மனுஷங்கள கேவலமான ட்ரீட் பண்றீங்களே"ன்னு. Trust me...இதுவர யாரும் தெளிவான பதில் சொன்னதேயில்ல. இது சிறுபிள்ளைத்தனமான/கேனத்தனமான கேள்வியா கூட இருக்கலாம். தெரிஞ்சுக்கதான் ஒவ்வொரு ஆள்டயா கேக்குறேன். ஒருவேள இவுங்க, தமிழர்கள்லயே மைனாரிட்டி தமிழர்களோ ? தெர்ல. உடனே - அதையும் இதையும் ஒப்பிடுவதா..அபத்தம். அபச்சாரம்...ன்னு டைப் பண்ணிக்கிட்டு இருப்பாங்க பாருங்க. அடப்பாவிகளா...எத எடுத்தாலும் தமிழர்களை வஞ்சிக்கிறார்கள்ன்னு நீங்க பேசலாம். தமிழர்களை தமிழர்களே எப்பிடி நடத்துகிறார்கள்ன்னு கேட்க கூடாதா...
Again, மெஜாரிட்டியான ஆட்களை பாதிக்கும்போது தான் பெரியளவில் எல்லாரும் பேசுவார்கள். அது இயற்கையே. அத புரிஞ்சுக்க முடியுது. The point is, நீங்க 2500 பழமையான மொழி பேசுங்க, நிலாவுல ராக்கெட்ட இறங்குங்க...இது எதுவுமே பைசா பிரயோசனப்படாது, கூடவே இருக்கும் ஆட்களை/உயிரினங்களை மதிக்காத வரை. அந்த வகையில், இந்தியா/தமிழ்நாடு - morally, ethically corrupted. இந்தமாதிரி ஊருக்கு மோடி மாதிரியான ஆள்தான் வாய்ப்பார்கள். கேணத்தனமா அதுக்கு ஜால்ரா அடிக்கவும் ஆட்கள் இருப்பார்கள். Accept the fact.